உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எக்கோவின் காதல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

57

 மாதத்தில் காய்ச்சலுக்கு ஆளானான் கணவன். சில நாள்களில் மலைக் காய்ச்சலாக மாறியது. அந்த மாற்றம் இவளது மங்கலநாணை-கழுத்திடு கயிற்றை அறுக்கும் வாளாயிற்று. சகடத்தின் ஒரு சக்கரம் நொறுங்கவே அந்தச் சகடம் பயனற்றுப் போயிற்று' என்று கூறி முடித்தான்.

'அவள் பெயர் என்ன?

'புனிதம்' என்று அவளை அழைப்பார்கள் எனச் சிறிது வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

'பெயர் புனிதம்' ஆனால், வாழ்வில் அஃது இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருக்க மனமின்றி வேலனிடம் விடைபெற்றுக்கொண்டு, நான் திரும்பிவிட்டேன்.

வண்டியில் வரும்போதெல்லாம் அவளது நினைவு தான். நம்நாட்டுச் சகோதரிகளின் நிலையை நடுநிலையோடு ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் அவன் கட்டாயம் பைத்தியக்காரன் ஆகிவிடுவான் என்பதை என்னளவில் அன்று தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள் வேலன் என்னைச் சந்தித்தான். 'துரை! புனிதம் அன்று உன்னைக் கண்டதிலிருந்து உன் மீது அன்பு கொண்டிருக்கிறாள், என் மனைவியிடம் உன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறாள் என்பது அவள் பேச்சிலிருந்து நன்றாய்த் தெரிகிறது. நீ விதவை மணம் செய்துகொள்ள விரும்புகிறாயா? விரும்பினால் சொல். நான் அதற்கு முயற்சி செய்கிறேன்” என்றான்.

'வேலா! என் குணங்களை நன்கு தெரிந்து கொண்ட நீயா இப்படிக் கேட்கிறாய்? பெண்ணுரிமை வழங்குவதென்றால்