பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 வேறு ஒரிடத்திற்குப் போவார்கள். இப்படி இடம் விட்டு இடம் போவதற்கு நான்தான் மிகவும் உதவியாயிருப்பேன். அவர்களுடைய கூடாரம், சாமான்கள், கம்பளிகள் எல்லாவற்றையும் கான் தான் சுமந்து செல்வேன். பாலை வனத்தில் என்னைப் போல் எவராலுமே கடக்க முடியாது. அதனுல்தானே என்னைப் பாலேவனக் கப்பல்” என்கிறீர்கள் ? முதுகிலே 800, 700 பவுண்டு எடையைச் சுமந்துகொண்டு ஒரு காளுக்கு 25 அல்லது 30 மைல் துரங்கூட கடப்பேன். அதற்கு மேல் என்னுல் முடியாது. வீண் தொங்தரவு செய்தால் விழுந்து படுத்துக் கொள்வேன் ! - என் எஜமானர் ஓரிடத்திலிருந்து வேருேர் இடத்திற்குப் புறப்படுவதற்கு முன்னுல், என் திமிலை ஒரு பார்வை பார்ப்பார். அது கொழு கொழு’ என்று இருந்தால், சரி, கவலையில்லை; நீண்ட துரம் போகலாம்” என்று முடிவு கட்டு வார். புறப்படுவதற்கு முன்பு, மோட்டார் காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்கிறீர்களே, அப்படித்தான் ! பாலைவனத்தில் எ ன க் கு அபூர்வமாகவே உணவு கிடைக்கும். கடற்கரை ஒரத்தில் அல்லது ஆற்றங்கரை அருகேதான் மரம் செடி கொடிகளைக் காணமுடியும். அங்கேதான் மக்களும் வீடு கட்டிக் கொண்டு கிரந்தரமாக வசிப்பார்கள். அங்கு என் எஜமானர் வியாபாரத்திற்காகச் செல்வதுண்டு. அப்படிப் போகும்போது,அங்கு ஏராளமாக உணவு கிடைக்கும். கி ைற ய கிறையச் சாப்பிடுவேன். தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டு வைப்பேன்.