இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
26. அப்பாவைப்போல் நான் ஆனால்
அப்பா வைப்போல் நான்ஆனால்
ஆயிரம் ரூபாய் சேர்த்திடுவேன்;
ஆனை குதிரை வாங்கிடுவேன்.
அப்பா வைப்போல் நான்ஆனால்
மாடி வீடு கட்டிடுவேன் ;
மோட்டார் வண்டி வாங்கிடுவேன்.
அப்பா வைப்போல் நான்ஆனால்
தண்ணீர்ப் பந்தல் வைத்திடுவேன்;
தருமம் பலவும் செய்திடுவேன்.
அப்பா வைப்போல் நான்ஆனால்
எங்கும் பொன்னே குவித்திடுவேன்;
எல்லோ ருக்கும் அளித்திடுவேன்.
அப்பா வைப்போல் நான்ஆனால்
உலகம் முழுவதும் சுற்றிடுவேன்;
உண்மை பலவும் கற்றிடுவேன்.
28