பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கில மாதங்கள்

ஆங்கில நாளில் ஐயம்ஏன் ?
அதுவும் எளிதே ஏப்ரல் ஜூன்
நவம்ப ரோடு செப்டம்பர்
நாட்கள் முப்ப தாம்என்பர் ;
பிப்பிர வரிஇரு பத்தெட்டாம் ;
பின்னும் இதற்கோர் சொட்டுண்டாம்.
நாலாண் டிற்கோர் நாளதிகம் ;
நினைவில் வைப்பாய் இப்பதிகம்.
மற்றவை முப்பத் தொருநாளே ;
மறக்க வேண்டாம் மறுநாளே.

11