இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்டுங் காணாதவன் போலவே - துளி கருணையில் லாதவனாய் உண்டது போதுமென் றெண்ணியே - உழவன் உறங்கத் தொடங்கி விட்டான் தக்கபடி பயிர் பண்ணினால்-காய்த்துத் தகுந்த விதம் தினமும் மக்கள் பசியைத் தவிர்ப்பதில்- அதிக மகிழ்ச்சி யடைந்திடுவேன் புத்துயி ரெய்தியென் வாழ்க்கையில் - இந்தப் பூமியி லின்புறவே கத்திரிக் காய்ச்செடி யாயினும் - இன்று கடவுளை வேண்டுகிறேன்.
.78
18