உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. புகழ் புகழெ னும்மலைச் சிகரம் பொதுவெனில் போகப் புறப்படுவேன் - என் சுகமி ழப்பது மன்றிப் பலபல தொல்லைகள் சூழ்ந்திடினும். அரிய பொன்மடி மீதி லமர்ந்திட தரையில் சுற்றித் தவழ்ந்து சலித்துப்பின் அன்னை அழைக்கையிலே- வெறுங் தாவுங் குழந்தையைப்போல் தூக்கம் சோம்பல் பசிப் பிணி யாதி தொலைக்கும் மருந்துகளாம் - நல்ல ஊக்கம் உண்மை உணவுக ளாதி உறுதுணை யா கிடவே இருள்க விழ்ந்திடும் வேளை அறிவெனும் இன்பப் பிறை ஒளிரும்- அங்கு அருளி லார்செயல் போல்கதிர் காய்கையில் அன்பு நிழல் வளரும். பற்றில் லாதநல் லுள்ளம் படைத்தவர் பாத மலர்ச்சுவட்டில் - பெரும் வெற்றி யென்ற எழுத்துகள் பொன்னால் விளங்கப் பதித்து வைத்தார் நல்ல செயல்களில் வல்லவர் யாவர்க்கும் நல்வர வென்றெவரோ— அங்கு சொல்லும் நல்லுரை யென்செவிக் கெட்டுது சுபத்துக் கறிகுறியாய் சீவ னாகிய தேவன் மனமெனும் தேரில் அமர்ந்தவனாய்ச் - சென்றான் ஆவ லாக விரைந்துமுன் னாலெனக் காதர வாகிடவே. 32 (புக) (புக) (4%) (புக) (42)

(புக)

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/32&oldid=1730702" இலிருந்து மீள்விக்கப்பட்டது