இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25. கூண்டுக்கிளி இச்சைக் கிசைந்தவிதம்-- பறந்து இனிய கனிசுவைத்து பச்சை மரக்கிளையில் இசை பாடிக் களித்திருப்பேன். அல்லி மலாதனிலே- தேனை அருந்தும் மதுகரன் கொல்லைப் புறந்தனிலே - தரிசனம் கோரித் தவமகிடக்கும் நாக்கினில் தேன் தடவி- இசை நன்கு பயிற்றுமென காக்கை இளம்மகவு - சிறகைக் கட்டியே காத்திருக்கும் காவில் உலாவிவரும் எழில் கருங்குயில் சிறுபெடைதன் சேவல் தவறுகளை - எடுத்துச் செப்பத் துடித்திருக்கும் மனித அமைப்பிர்லே - தெய்வம் மலிந்து கிடக்கையிலே மனிதன் அதைமறந்து-என்னை மயக்கிச் சிறைபிடித்தான் என்னெழில் மேனியைப்போல் - தனக் கில்லையென் றேங்கியழும் சின்னஞ் சிறியசிட்டு - இன்று சிரிக்கத் தொடங்குதந்தோ ! இரவும் பகலெனவே- மாறி இன்று நேற்றாய்த்தினங்கள் வருவது போவதுமாய்-- எனது வாழ்நாள் கழிகிறதே!
35
35