33. அறியாமை சின்னஞ் சிறியவனாக இருந்தனன் நானுமே-நாளும் சிரித்த முகத்துடனே என்னை மிகவும் அருமையாய்ப் பேணி வளர்த்தனர் - வீட்டில் இருந்தவர் யாவருமே. வீட்டி விருந்தவர் யாவரி லும்மெத்தப் பெரியவர் - சகல விபரமு மறிந்தவ ரென் பாட்டனா ரென்பதை வீட்டி லிருக்கின்ற பூனையும் - நாயும் பசுவுங்கன் றும் அறியும். பருத்துச் சரிந்த வயிறும் வழுக்கைத்தலையுமாய்க் - கண்கள் பார்க்கப் பயங்கரமாய் கரைத்த புருவம் முருக்கிய மீசையு யாகவே சிவந்து நின்கு வளர்ந்திருப்பார் ஆசை முழுவதும் காசுமேல் வைத்தவராயினும் - என்மேல் ஆருயிர் வைத்திருந்தார் காசுக் கதைகளைப் பேசவும் கேட்கவும் அப்பனே - வாடா கண்மணி யென்றழைப்பார் இரவைப் பகலெனச் சொல்லி யுலகில் மெய்ப்பிக்கலாம் - நல்ல இனிப்பைக் கசப்பெனலாம் பொருளினா லாகாத காரியம் யாதொன்று யில்லைகாண் - இந்தப் பூதல மீதெனவே பணமுள்ள வன்பல வானெனச்சொல்லும் பழமொழி,நெஞ்சில் பதிய உரைத்திடுவார் குணமாக வேயிதைக்கொள்ளெனப் பின்னையும் கூறுவார - குறிக் கோளிது தானெனவே
43
43