உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. காந்தி தரிசனம் காந்தி மகானின் தரிசனம் - இன்று காணக் கிடைத்ததம்மா! மாந்தளிர் போலெழில் மேனியார்- கதிர் மல ரொளிப் புன்னகையார் தாமரை யொப்பக் குவித்திடும்--கரம் தண்ணரு ளாகியகண் பூமிசை மாந்தர் புகழ்ந்திடும்- தூய்மை பொலியும் கதருடையார். பாலமு தாகிய நூல்களில்-சுவைப் பண்புப் பொருள் திரட்டி ஞாலத் துயிர் பசியாறவே-உண்ண நல்கிய நம்பெருமான். சாந்த மெலுந்திருச் சாலையில்--சன சக்தி மணி பரப்பி பாந்த மெனுமன் பிறுக்கவே-வாழ்வுப் பயணத்தைப் பண்ணவைத்தார் பாவப் படுகுழி தன்னிலே-வீழ்ந்து பரிதவிக் காதிருக்க தேவ அகிம்சைத் துடுப்புடன் - சத்தியத் தெப்பம் தெரிந்தளித்தார் அச்சப் பெரும்பிணி நீக்கியே - பகை ஆட்சித் தளையறுத்து மெச்சுஞ் சுதந்தர அன்னையைச்-சிறை மீட்ட பரமபிதா ! புகழ்பவர் போற்றிப் புகழுவீர்=ஒரு புண்ணிய மூர்த்தியென். மகிழ்பவர் வாழ்த்தி மகிழுவீர்-ஜெய் மகாத்மா காந்திக்கென

45.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/45&oldid=1730715" இலிருந்து மீள்விக்கப்பட்டது