உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தமிழ் மெய்ப்பொரு ளாகிய கன்னித் தமிழணங்கே - என்றன் மேன்மைக் குறுதுணையே செய்ப்புனல் நெற்பயி ரென்ன உயர்த்திடுவாய்- உன்னைச் சேந்தவர் யாவரையும் பொய்ப்பொருள் தன்னைப் பொருளென எண்ணினதால் போற்ற மறந்திருந்தேன் - அன்று கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் நீயென்வே கற்றுக் களிப்படைவேன். நீல வானத்தில் உலவும் நிறைமதிபோல் - எனது நெஞ்சில் உலவிடுவாய் ஆல மரத்தின் விழுதுக ளாமெனவே- எனக் காதர வாயிடுவாய் பாலுடன் தேனைப் பருகும் இனிமையிலும் - கோடி பங்கதி கம் இனிப்பாய் கால மலர்களைத் தூளி இறைஞ்சுவதே எனது கடமை யெனவுணந்தேன். (இன்று வாழ்விருள் சூழ்ந்திடும் பாதையில் நீயிருந்தாய் - ஒளிர் வண்ணத் திருவிளக்காய் பாழ்படு மென்னுட வாகிய வீணையிலே- இன்று பண்க ளிசைத்திடுவாய் ஊழ்வினை கூட்டிட உன்னை யடைந்தனன்காண்-என்றன் ஊனுயி ரேவுணர்வே தாழ்வறு மேனிலை தந்த தமிழணங்கே-கவிஞர் தங்கள் தவப்பயனே! இளமை முதுமை யிரண்டிலும் செந்தமிழே - எனக் கின்பம் பெருக்கிடுவாய் குளுமை மிகுந்திள நீருடன் மோரெனவே - துன்பக் கோடையில் குளிர்ந்திடுவாய் களமென என்னகந் தன்னிற குவித்திடவே-கதிர்க் கவிதைக ளாயிடுவாய் வளமை யறிந்து வளங்கும் கலையுணர்வாய்-வாழ்க வையக மின்புறவே!

51

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/51&oldid=1730722" இலிருந்து மீள்விக்கப்பட்டது