உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. இனிமே லேனும் வேண்டாம்! மிகமிகநன் றாயிங்கு வாழ்க வென்றே மேலான முறையில் நமைப் படைத்தி ருந்தும் சுகமெபை தெள்ளளவும் அறியோ மாகிச் சோற்றுக்குத் தாளங்கள் கொட்டா நின்றோம் பகைமையெனும் ஒருகுணந்தான் நம்மை யிந்தப் படுகாசம் செய்ததென அறிவாய் தம்பி அகஞ்சுருங்கி முகங்கோணும் அடிமை வாழ்க்கை யாருக்கும் வேண்டாங்காண் இனிமே லேலூம் நல்லவழி தனைத்தேடிச் செல்லு வோர்க்கு நல்லதுவே நேர்வதலால் ஒருக்கா லேனும் அல்லவைகள் நேர்வதிலை என்னும் சொல்லை அறியாது வீணாய்நொந் தழியா நின்றோம் கல்லாத ஒருகுறைதான் நம்மை யின்று கண்கலங்கச் செய்வதென அறிவாய் தம்பி தொல்லையிலே போய்மாட்டிக் கொண்டு வீணாய்த் துன்புறுதல் வேண்டாங்காண் இனிமே லேனும் மடங்கொன்று வீரத்தை யூட்டிச் சொந்த மாதரையில் வாழ்க்கைக்குத் துணையாய் க்கொண்டு அடங்காதும் அடக்காதும் பிறரை நேசித் தானந்தம் காணாதே அலையா நின்றோம் திடங்குறைந்த காரணந்தான் நம்மை இன்று திண்டாடச் செய்வதென அறிவாய் தம்பி நடுங்கியநெஞ் சுடையவொரு பேடி வாழ்க்கை நானிலத்தில் வேண்டாங்காண்.இனிமே லேனும் புவிமீதி லுள்ள தனைச் சமமாய்ப் பங்கிப் புசிக்கின்ற நற்பழக்கம் படியா திங்கே அவனைவிட எனக்கதிகம் வேண்டுமென்று ஆகடியம் செய்துமிக நோகா நின்றோம் அவனுக்கும் உனக்குள்ள உரிமை யுண்டு அபிலாசை அனைவர்க்கும் ஒன்றே தம்பி? எவனையுமே இழிவாக எண்ணிக் கொண்டு இயல்பழிய வேண்டாங்காண் இனிமே லேனும்

53

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/53&oldid=1730720" இலிருந்து மீள்விக்கப்பட்டது