உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வைகறை வனப்பு அழகிய வைகறையே -- ஒளிசெய் அழகிய வைகறையே பழகிய பாவலரை - மிகமிகப் பரவசம் பண்ணிடுவாய். காடுகள் கழனிகளில்- கம்புநெல் கருகரு வென வளர்ந்தே ஆடுகள் மாடுகளை - அருகினில் அழைப்பது போலசையும். - பருவதம் பருதியுடன் - இரவு பண்ணிய பகைச் செயலை உருகி யுரைப்பது போல்--அருவி உருண்டுருண் டோசையிடும். நீல மலர் களையே -- இருளாய் நினைத்ததை நீக்கிடவே காலை யிளம் பரிதி விரியும் கதிர்க்கரத் தால் துடைப்பான். பளிக்கரை களில் புகுந்து-- பாவையர் பம்பின பான்மையைப்போல் குளக்கரை களில் தவளை - நீரில் குதித்துளம் களித்திருக்கும். விசும்பிடை விளக்குகளாம் - மீன்கள் விடிகையில் வெருண்டனவாய் பசும்புல்லில் பதுங்கினபோல் - பாமரப் பனித்துளி படிந்திருக்கும். பற்பல மலர்களிலே - தேனைப் பருகிய மதுகரங்கள் அற்புதப் பண்ணிசைக்கும் - செவியின் அமுதிது தானெனவே.

6

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/6&oldid=1730676" இலிருந்து மீள்விக்கப்பட்டது