இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4.சாதகம் நமையு யர்த்திடு வோம்தி னந்தினம் நமையு யர்த்திடுவோம் தமையுயர்த்துவ துந்த குந்ததோர் தரும மென்பதினால். கண்ணுங் காதுங் கையுங் காலுங் கருத்து ரைக்கவாய் மண்ணில் மனிதர்க் கமைந்தவாறு மற்றொன் றுக்குண்டோ? குருவி யனைத்துங் கூடிக் குடித்துக் குறைந்த தேயென அருவி யழுத வாறு மனிதர் அங்க லாய்ப்பரோ? பாழ் நினைவுடன் தீச்செயல்களைப் பரிக ரித்ததுமே வாழ்வி ருளற நீள றச்சுடர் வழிவ குத்திடுமே. அறிவி ருப்பதின் பயன் அனைத்தையும் அலசி யறிவதே திறமி ருப்பதின் பயன் அனைத்தையும் திருந்தச் செய்வதே. நிர்வி சார நிலையில் நமது நினைவு சொல்செயல் சர்வ மொன்று போன்றி யங்கும் சக்தி சாரவே. அமர ராக லாமி தன்றெனில் அரக்க ராகலாம் தமது செயல்க ளேயெ தற்கும் தகுந்த சாதகம்!
9
9