பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 உலக ஒளி தின் ஒளியானார்! காந்தியாரின் புகழை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல- எல்லோரும் புகழ்கிறார்கள்; உலக மக்க ளெல்லாம் போற்றுகிறார்கள். அவ்விதம். பிறர் போற்று வதுதான். ஒரு தலைவருக்குக் கிடைக்கும், தனி மரியாதை யாகும். . இதனை, காங்கிரஸ் நண்பர்கள் எண்ணியிருந்தால். என்னை உள்ளன்போடு வரவேற்றிருக்க வேண்டும். மாற் றுக் கட்சிக்காரனான நான், திறந்துவைப்பதைக் குறித்துப் பெருமை யடைந்திருக்கவேண்டும். அருளொழுகும் கண் ணைப்பார் ! அழகு மேனியைப்பார்! ஒளிதவழும் முகத்தைப் பார்! உத்தமரைப்பார்'-என்று என்னை அழைத்துச் சொல்லி யிருக்கவேண்டும். இவ்விதம் செய்திருந்தால், தங்களுக்கும் கீர்த்தி தேடிக் கொண்டவர்களாவார்கள்: உத்தமருக்கும் கீர்த்தி தேடிக் கொடுத்தவர்களாவார்கள். அதை விட்டு விட்டு எம்முடைய காந்தியாரைத் தீண்டவே கூடாது! என்று சொல்வது. பொருத்தமில்லை - பொருளில்லை-கீர்த்தி இல்லை - சிறப்பு இல்லை. உத்தமர் காந்தியார் வெறிகொண்ட ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்னும் செய்தியை 'ரேடியோ மூல மாகக் கேள்விப்பட்டேன்-பதறினேன், அப்போது என்னை வானொலி நிலையத்தார். அழைத்தார்கள். காந்திபடிகளைக் கொன்றவன் மராட்டிய பார்ப்பனான கோட்சே என்பவன். அதனால் மக்களின் ஆத்திரவெறி, அக்:குலத்தார்மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சிய காரணத்தால் என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள். கயவனா யிருந்தால். கட்சி வெறி கொண்டவனா யிருந் தால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் விபரீதங்கள் பல ஏற்படுவதைக் கண்டிருக்க முடியும்.