பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 உலக ஒளி போர்வையை போட்டுக் கொண்டு, அதிகார வேட்டை வாடியவனா! இந்தக் கரம். வெள்ளையனோடு கை குலுக்கிய சுரமா வகுப்புவாதத்தை வளர்த்து, வெறிச் செயல் ஏற்பட பாடுபட்ட கரமா / பள்ளிவாழ்வு முடிந்ததும், உத்தியோகத் துக்குச் செல்லாது, ஊருக்காக உழைக்கும் கரம் / பொது வாழ்வுக்காகப் பாடுபடும் கரம்! இந்தக் கரம் தவிர. வேறு எந்தக் கரம், சிலையைத் திறப்பது பொருத்தமாகும்? காந்தியார், காங்கிரசைக் கட்டிக் காத்தார்-வளர்த்தார்- நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தார். காங்கிரசில்" நாலணா மெம்பராகக்கூட அவர் இருந்ததில்லை. பலகாலம்? தான் விரும்பிய விடுதலை கிடைத்துவிட்ட தென்றதும் "காங்கிரஸ் தேவையில்லை - கலைக்கலாம்" என்றும் சொன் னார். காங்கிரஸ் லாப வேட்டைக்காரர்களின் கூடமாகி விட்டது என்று கூறி மனமும் நொந்தார். வன்! நான், காந்தியார் பெயரைச் சொல்லி லாபம் பெறாத அவர்களால் அழுத்தி வைக்கப்பட்டிருப்பவன். அவர் வளர்த்த காங்கிரசின் நிலை என்ன, இப்பொழுது? பழைய கோட்டையில் வௌவாலும், புற்றுக்குள் பாம்பும் இருப்பது போல, காங்கிரசுக்குள் கயவர்களும், சுயநல வாதிகளும் இருப்பதாக அவர் கூறினார். அவர் எங்கே? இன்று இருப்போர் எங்கே ? அந்த ஒளி எங்கே? இந்த இருள் எங்கே! இந்தச் சிலை திறப்பு விழாவை, என்னைக் கொண்டு செய்யவேண்டு மென்பதில். இங்கிருக்கும் கம்யூனிஸ்டுத் தோழர்களும் விரும்பி ஒத்துழைத்ததாக அறிந்தேன். அந்த ண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.