பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொன் மொழிகள் நமது குறிக்கோளும் நாம் தீரட்டும் வலிவும்! தேங்காயை தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று உடைத்து அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முடியை அர்ச் சகருக்குக் கொடுத்து விட்டு. இன்னொரு முடியை வீட்டுக் குக் கொண்டு செல்பவர்களும் உண்டு. இன்னும் சிலர். வீட்டு விசேடத்தின் போது 'திருஷ்டி கழிப்பதாகக் கூறி, நடுவீதியில் சூறைக்காய் உடைப்பது போல - உடைப்பார்கள். அதைப் பொறுக்கச் செல்பவர் களில் சாமர்த்தியம் உள்ளவனுக்கு நல்ல தேங்காய் கிடைக் கும்; மற்றவர்களுக்கு வெறும் ஓடுதான் கிடைக்கும். . இன்னொரு விதமும் உண்டு - தேங்காயைத் தாய்மார்க ளிடம் கொடுத்தால், அதை உடைத்துப் பதமாகத் திருகி எந்தப் பண்டத்தில் சேர்த்தால் இனிப்போடு சுவை தரும் என்பதறிந்து பக்குவமாகச் சேர்த்துப் படைப்பார்கள். கட்சிகளும் அப்படித்தான்; பயன்படுத்துகிற விதத்தை யொட்டித்தான் பலனும் இருக்கும். ' மூன்றாவது சொன்னேனே, அந்த விதத்தைச் சேர்ந் ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். சில கட்சிகள், தங்களுக்கிருக்கும் செல்வாக்கை சூறைக்காய் உடைக்கிறதைப் போல பயன்படுத்தி வருகின்றன. உடைக்கும்போது சிலருக்கு மண்டைகளும் உடைகின்றன; சாமர்த்திய முள்ளவனுக்குத் தேங்காய்