பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 பொன் மொழிகள் சியோ கூட பெறாமல் சிதறி வாழ்க்கையை சிதைத்துக் கொண்டுள்ள கோடிக் கனக்கான தொழிலாளரையே குறிப்பதாகும். தொழிலாளர்கள் அவல வாழ்வு பெற்றிருப்பதற்கு பெரிதும் காரணமாக இருப்பதும் அவர்கள் எழுச்சிபெற்று உரிமைப் போருக்கான வகை தேடிக்கொள்ளாமல் இருப்ப தற்கும் காரணமாயிருப்பது மதத்தின் பேரால் அவர்கள் மனதிலே திணிக்கப்பட்டுள்ள மூட நம்பிக்கைகளே ஆகும். ஆகவே அவற்றினின்றும் விடுபடுவது தொழிலாளர்களின் விடுதலைக்கு முக்கியமான முதற் காரியமாகும். இதனைச் செய்யாமற் போனால் இன்று தொழிலாளர்களின் மனதிலே குடிகொண்டுள்ள பழயகால நம்பிக்கைகளை உபயோகப் படுத்திக்கொண்டு தந்திரக்கார தன்னல அரசியல் கட்சிகள் புரோகித வகுப்பாரின் கூட்டுறவுடன் தொழிலாளரை நசுக்கிவிட முடியும். திராவிட நாடு திராவிடருக்கு ஆகவேண்டும் என்று கூறும்போது பாடுபடும் இனத்தைப் பாடுபடாத இனம் சரண்டும் கொடுமையும் பாடுபடும் இனம் தன்னுடைய மனதிலே பூட்டிக்கொண்ட தளைகளால் அடிமைப்பட்டுக் கிடக்கும் கேடும் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தையே தான் வேறு வார்த்தைகளால் கூறுவதாகப் பொருள். சம தர்ம நாடு. சமூக சமதர்மம் என்ற அடிப்படைமீது கட்டப் பட்டால்தான் நிலைக்கும். இந்த ஒரு அம்சம் இந்த நாட் டுக்கு மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் ஜாதியின் பேராலே பொருளாதாரச் சுரண்டல் முறை ஏற்பட்டிருக்க . வில்லை. தன்னாட்சி பெற்ற திராவிட நாட்டிலே ஆரிய ஆதிக் கம் இராது என்றால் தந்திரத்தால் ஏழைகளையும் உழைப் யாளரையும் ஏமாற்றி உழைக்க வைத்து, மதத்தின்பேரால்