பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 பொன் மொழிகள் உழைப்போனே ! உன் நிலையைப் பார் ; சிந்தி : ' ஏன் என் று கேளேன்; சக்திகளைத் திரட்டு: உரிமைப் போரில் இறங்கு: உன்னை அடிமைப்படுத்தும் அறியாமையை எதிர்த்து. ஜாதீய முறையைத் தகர்த்து முதலாளித்து வத்தை முறியடித்து வெற்றி காணப் புறப்படு! அவசரப் பட்டு ஆபத்துக்கு இரையாகாதே! வெண்ணெய் திரளு வதற்குள் தாழியை உடைத்துவிடாதே! உலகம் உழைப்பாளிக்குத்தான் திராவிடநாடு திராவிடர்க்கே என்று கூறுவது உலகம் உழைப்பாளிக்கே என்ற முழக்கம் போன்றதே. குறிச்சொல் மட்டுமே வேறு. குறிக்கோள் ஒன்றுதான் ! உலகம் உழைப் பாளிகளுக்கே. உலுத்தர்களுக்கல்ல. பிறர் உழைப்பை உண்டு கொழுப்பவர்க்கல்ல, சுரண்டி வாழுபவர்க்கல்ல. முதலாளித்வத்துக்கல்ல. ஆம்; அதே குரலில் தான் திராவிடநாடு திராவிடருக்கு. ஆரியருக்கல்ல. அண்டிப் பிழைக்க வந்து நம்மை மண்டியிடச் செய்த மத தரகர் ஆட்டத்துக்கல்ல, வடநாட்டு முதலாளித்வத்துக் கல்ல. உழைக்கும் உத்தமர்களாகிய திராவிடர்களுக்கே. வறுமைக்கு காரணமென்ன? மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம் பொருளாதார யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள். யந்திரக் கோளாறு நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக் குக் காரணம்தான், ஆனால் ஏன் இத்தகைய சுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்டது, எப்படி ? யாரால்? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர்? ஏன் இன்னும் சகித்துக் கொள்கின்றனர்? என்றுகூறி கஷ்டப்படும் மக்களை சுரண்டு பவர்கள் மயக்கியும் அடக்கியும் வைப்பது ஏன்? என் பன போன்றவைகளை திராவிட இயக்கம் மக்கள் மன்றத்