பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 139 பாடுபட்டார்கள். சமதர்ம நோக்குடையத் தலைவர்கள். அந்த அரும்பணியின் ஆரம்பவேலை. தொழிலாளரின் உழைப்பு, காலம் அளவு கட்டுதிட்டம் இன்றி முதலாளி களால் சூறையாடப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று துவக்கப்பட்ட முதல் முயற்சி மேதினம். முதலாளித்வ முறை முதலாளித்வ முறை லாபம் கிடைக்கும் வரையில் வேலை தரும் தொழிலாளர்களுக்கு. லாபம் இல்லையேல். வேலையுமில்லை என்று கூறிவிடும். பால் தரும் வரையில் பசு தொழுவத்திலே யிருக்கிறது. பால் தருவது தீர்ந்ததும் கிராமத்துக்கு துரத்தப்படுகிறதே அதுபோல. நாட்டு வளம். இயற்கை சக்தி. பாட்டாளி உழைப்பு யாவும் சேர்ந்து இந்த முதலாளித்வத்துக்கு பெருவாரியான லாபம் தருகிறது. விஞ்ஞானத்தை விலைக்குவாங்கி தொழிலாளியைக் கொண்டு மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தையும் துணைகொண்டு லாபம். தேடக் கிளம்பிவிட்டனர் முதலாளிகள். சிலருடைய தயாள குணத்தினால் ஒரு பெரிய கூட்டத் தில் வளர்ந்து வரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலே வறுமை கொட்டலாயிற்று. வாட்டம் அதிகரித்தது. அதே போது. தொழில் முறை மாறி பண்ட உற்பத்தி அதிகரித்து செல்வம் கொழித்ததால் வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரீகம் மேலோங்கி விட்டது. சிறிய நாடுகளில் முதலாளிகள் இன்றைய உலகில் பெரிய நாடுகளில் தான் இருக்கிறார்கள். சிறிய நாடுகளில் முதலாளிகள் இல்லை.