பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 எட்டு நாட்கள் . 'மகனே! வேகமாக ஆபத்தை நோக்கிச் செல்கிறாய்" என்று ஏச்சரித்தார். ப்ரூனோ பதறவில்லை -- புன்னகை பூத்த முகத்துடன் நின்றான். மடாலயச் சாமியார்களின் மந்த மதியையும் கோலாகல வாழ்வையும் கேலி செய்து. ப்ரூனோ அந்த ஏட்டிலே தீட்டி யிருந்தான். அவனுடைய நெஞ்சிலே. நாத்தீக அரவம் குடிபுகுந்துவிட்டது என்று சந்தேகித்த பாதிரிகள். விசாரணை நடத்தத் திட்டமிட்டனர் - மதவிசாரணை அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்ததும். ஆன்ஸ்லம் பாதிரியார் அலறிப்போனார். ப்ரூனோ சிறுவன். நாட்டிலே நடைபெறுவது, அதிலும் மக்களின் பூஜை யைப் பெற்றுக்கொள்ளும் மடாலயத்திலே நடைபெறும் முறை அவனுக்கு என்ன தெரியும்--ஆன்ஸ்லம் அறிவார்! விசாரணை என்றால் என்ன ? கொடுமைக்கு வேறோர் பெயர் தானே! கனல்கக்கும் கண்படைத்த கொடியவர்கள், ஈவு இரக்கமற்ற நெஞ்சினர்கள். உருட்டி மிரட்டும் கண்ணினர். உட்காருவர்: எதிரே நிறுத்தப்படுபவனைக் கேள்விகள் கேட்பர்: அந்தக் கேள்விகள் எதன் பொருட்டுக் கேட்கப் படுகிறது என்று அறியாமல், பதில் கூறுவான் ; அந்தப் பதிலிலே பொதிந்துகிடக்கும் பொருளைத் துருவிப்பார்த்து. இவன் நாத்தீகன்தான் என்பர் !-தீர்ந்தது. கடும் தண்டனை! சிறை கிடைக்கலாம். அவர்கள் சீற்றம் அதிகம் கொள்ளா திருந்தால். சித்திரவதை செய்வது. வழக்கமான சாதாரண தண்டனை ! இந்த 'விசாரணை ஏற்பட இருக்கிறது, ஜியார்டானோ வுக்கு. அந்தத் துணிவுள்ள வாலிபன், வானத்தின் வண் ணத்தைக் கண்டு களிக்கிறான் அலையின் ஒலி கேட்டு மகிழ்கிறான் - கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் 1