பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 எட்டு நாட்கள் அக்ரமக்காரர்கள் தந்த கொடுமைகளைத் தாங்கிக்கொள் ளும் உள்ள உரமும், கொள்கைப் பற்றும் இருந்தது ன் பதை எடுத்துக்காட்டும் சின்னம். இந்தச் சிலுவை என்ற னர் - அதைக் கண்டும், கருத்திலே தெளிவு பெற மறுத்தனர்- அதைக் காட்டியே, ட்ரூனோவைக் கொன்றனர், என்று பாவிகளை இரட்சிக்க இரத்தம் சிந்தினார். தொழுகையின்போது கூறுபவர்கள். ப்ரூனோவைக் கொன் றால், அன்க்கும் அறத்துக்கும் இழுக்காகுமே என்று எண்ணவில்லை. எங்கே தங்கள் ஆதிக்கம் அழிந்து பட்டு விடுமோ என்ற அச்சத்துக்குத்தான் ஆட்பட்டனர், கோலா கலமாக ஆண்டுவந்த பழைய மார்க்க மன்னன் ஏசுவைக் கொன்றால்தான் தன் ஆதிக்கம் நிலைத்திருக்க முடியும் என்று எவ்விதம் கோபம் கக்கினானோ, அதற்குத் துளியும் குறைந்ததாக இல்லை, சிலுவை தொழுதோரின் சீற்றம். ஏசு மீண்டும் எழுந்து வந்தார் என்கிறார்கள். ப்ரூனோ தேவன் அருள் பெற்றவன்கூட அல்ல. எனினும் ஜியார் டானோ ப்ரூனோ சாகவில்லை என்றும் நிலைத்து நிற்கும் உண்மை சாகாது. - ஜியார்டானோ ப்ரூனோவைக் கொல்வதற்காக மூட்டப் பட்ட நெருப்பிலிருந்தும். கிளம்பிய சிறு சிறு பொறிகள், பல்வேறு இடங்களில் பரவி, குருட்டறிவை அழிக்கும் பணியாற்றின. அவரை அக்ரமமாகக் கொன்றதற்குக் கழுவாய் தேடு வதுபோல, பிற்காலத்தில் அவருடைய உருவச்சிலையை வைத்தனர். ஆனால் அவர் அடைந்த வெற்றி அது அல்ல. பகுத்தறிவு, பெருமிதம்கொள்ளச் செய்ததே அவர் அடைந்த வெற்றி. ப்ரூனோ வாழ்கிறார், வெற்றி வீரராக.