பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என்.அண்ணாதுரை 7 திலிருக்கும். எந்தக் கருத்தை ஏற்க மறுப்பவனும், மாறு தலான கருத்தைக்கொள்பவனும் விள்பவனும் நாத்தீகர் எனப்பட்டனர்.\ போப்பாண்டவரின் ஸ்ரீமுக த்தைத் தீயிலிட்டபோது மார்டின் லூதர்நாத்தீகனென்று. கத்தோலிக்க உலகினால் குற்றம் சாட்டப்பட்டார். அதேபோல, இங்கிலாந்தில் பிராடெஸ்டென்ட் மார்க்கம் அரச மார்க்கமான பிறகு, கத்தோலிக்கர்களை அங்கு 'நாத்திகர்' என்று கூறினர். மார்க்க சம்மந்தமான பிரச்னைகளில் மட்டுமல்ல. அன்று ஆதிக்கத்திலிருந்த மத ஏடுகளிலும் அவைகளைத் துணையாகக்கொண்டு தீட்டப்பட்ட மற்றத் துறைகள் பற்றிய ஏடுகளிலும் காணப்பட்ட கருத்துகளுக்கு முரணான கருத்துக்களைக் கொள்பவரை எல்லாம். நாத்தீகர் என்றே குற்றம் சாட்டினர்-கடும் தண்டனை தந்தனர் சித்திர வதை செய்தனர். அரசு முறை, அதன் தொடர்பான அறமுறை,வர் வசூலிக்கும் முறை, சமுதாய அமைப்பு முறை நடை நொடி பாவனைகள், எனும் எதிலும் அரச மார்க்கத்தின் மத ஏடுகளில் உள்ளபடியே சொல்லும் செயலும் அமைந் திருக்கவேண்டும் என்றனர். மனிதன் மனிதனை அடிமையாகப் பிடித்துவைத்து, வேலை வாங்குவதும், சந்தைச் சதுக்கத்தில் ஆடுமாடுகள் போல் விற்பதும், கொடுமையானது. அநாகரீகமானது, அஃது அறமாகாது, என்று கருணையும் நேர்மையும் கொண்டவர்கள் வலியுறுத்திய போதுகூட, அந்த முறையீடு நாத்திகம் என்றே கூறப்பட்டது.