பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என்.அண்ணாதுரை 75 அளித்தான், இதை ஏழை எளியவர்ருக்குப் பகிர்ந்தளிக்க. வேண்டும், அவர்கள் விவசாயக் கருவிகள் வாங்க இந்தப் பணம் தேவைப்படுகிறது. செனட் சபையிலே. செல்வர்களே கூடிக்கொண்டு. கொட்ட மடிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் தீர்ப்புகள் ஏழையருக்குக் கேடு பயப்பனவாகவே உள்ளன. ஓர வஞ் சனை நடைபெறுகிறது, எனவே செனட் சபையிலே, ஏழைகளும். நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப உரிமை பெறவேண்டும். செனட் சபையின் தீர்ப்பை மாற்றும் உரிமை மக் களுக்கு அளிக்கப்பட வேண்டும். போரில் ஈடுபடுவதற்கு ஒரு கால வரையறை இருக்க வேண்டும். இன்னோரன்ன திட்டங்களை டைபீரியஸ் புகுத்த விரும் புவதாகக் கூறினான். ஏழைகளுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும் கொடுமைகளையும் அகற்ற, இந்தத் திட்டங்கள் பெரிதும் பயன்படும். பாதுகாப்பும் உரிமையும் பெற்று. ஏழையர். தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டு. அதன் மூலம். நாட்டின் வளத்தையும் மாண்பையும் அதிகமாக்க முடியும். செல்வர்களின் சீற்றம் மேலும் அதிகமாயிற்று. கொலை காரர்கள் ஏவப்பட்டனர். மக்களோ டைபீரியசைக் காக்கக் கிளம்பினர். பலர் அவனுக்குப் பாதுகாப்பளிக்க அவன் வீட்டைச் சுற்றிலும் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு. இரவேல்லாம் காவலிருந்தனர். ஏழைகளுக்காக உழைத்து, அவர்கள் நெஞ்சத்திலே இடம் பெற்றுவிட்ட டைபிரிய சுக்கு இந்தச் சம்பவம் மாபெரும் வெற்றி எனத் தோன் றிற்று.