பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என். அண்ணாதுரை 77 டைபீரியசின் சார்பினர் படுகொலை செய்யப்பட்டனர். பாதகர்கள் டைபீரியசையும் கொன்றுவிட்டனர். ஏழைகளின் நல்வாழ்வுக்காக உழைத்தவனை அடித்துக் கொன்றனர்! ஏழைகள் வாழ வழி வகுத்துத்தந்த உத்த மனை,தன்னலமின்றி உயர்ந்த கொள்கைக்காகப் பாடுபட்ட இலட்சிய வீரனை மனித மிருகங்கள் தாக்கிச் சாகடித்தன! ரோம் நாட்டிலிருந்த காட்டுமுறையை மாற்றி அமைக்க விரும்பினான், நாட்டின் முதுகெலும்பாக உள்ள ஏழை மக்களை வாழ வைத்தால்தான் நாட்டுக்கு மாண்பு என்று நம்பினான். நன்னலம் தற்பெருமை, எதற்கும் இடந்தரா மல், தளராது உழைத்துவந்த வீரனை, தன்னலக்காரர்கள் படுகொலை செய்தனர். செல்வரின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிபவர்களை எப்படிச் சித்திரவதை செய்வோம் காணீர்! என்று கூறுவது போல. இலட்சியவாதிகளுக்கு எச்சரிக்கை தருவது போல, சந்தைச் சதுக்கத்திலே சழக்கர் கூடி டைபீரியசைப் படு கொலை செய்தனர். கள்ளனும் காமுகனும், பிறர் பொருளைக் கொள்ளை அடித்து மாளிகை கட்டுவோனும், துரைத்தனத்துக்குத் துரோகம் இழைத்து அதை இலஞ்சம் கொடுத்து மறைத்து விடுவோனும், கற்பழித்தவனும், காமுகனும், கனவானாகி, செனட்சபை உறுப்பினனாகி, விருது அணிந்த சீமானாகி. கொலு இருந்துவந்தான். ஏழைக்கு இதமளிக்கும் ஏற்பாடு பற்றியன்றி வேறொன்றின் மீதும் நாட்டம் கொள்ளாமல், மிரட்டலுக்கு அஞ்சாமல், தோல்வி கண்டு துவளாமல். மாளிகையின் மயக்க மொழி கேட்டு ஏமாந்து விடாமல், உழைத்த உத்தமனைக் கொலை செய்து விட்டனர் கொடிய வர்கள்.