பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என் அண்ணாதுரை 89 மக்களிடம். கெயஸ் கிரேக்கஸ் மிக நெருக்கமான தொடர்புகொண்டான். முன்பெல்லாம். நேராம் நகரில் பேச்சாளர்கள், செனட் சபைக் கட்டிடத்தை நோக்கித்தான் பேசுவாராம்-மக்களைப் பார்த்தல்ல! கெயஸ் கிரேக்கஸ்தான் முதன் முதலாக மக் களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தது/ சொல்லவேண்டியது மக்களிடமே ஒழிய செனட்சபை யிடமா? என்று கேட்பது போலிருந்தது. கெயசின் புது முறை. மக்களே அரசு எவ்வழி செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் ஆற்றலும் உரிமையும் படைத்தவர்கள். யன்றி, சீமான்கள் கொலுவிருக்கும் செனட்சபை அல்ல. என்ற கருத்தை விளக்குவதாக அமைந்தது அந்தப் புது முறை. மனுச் செய்துகொள்வதாக இருந்தது முன்னைய முறை; இது மக்களைப் பரணி பாடிடச் செய்வதாக அமைந்தது. கோரிக்கையை வெளியிடுவதல்ல கூட்டத்தின் நோக் கம். மக்களின் ஆற்றலை அரசாள்வோருக்கு அறிவிக்கும் செயலாகும். என்று தெரியலாயிற்று. மக்களுக்குப் புது நிலை பிறந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் நிகழ்ச்சியாயிற்று. புதுமுறை. சொல்லில் வல்லவனான கெயஸ் கிரேக்கஸ், செயலாற்று வதில் சளைத்தவனல்ல, தானே முன்னின்று எல்லா வேலை. களையும் கவனிப்பான். பொதுப்பணிதானே. என்ற எண்ணத்தில் மற்றவர். ஏனோதானோவென்று இருந்துவிடக்கூடும், கவைக்குதவாத முறையிலே காரியமாற்றக்கூடும். கண்மூடித் தனமாகச் செலவு செய்துவிடக்கூடும், சிலர் வேண்டுமென்றே