பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என். அண்ணாதுரை 9 அவனைத் தண்டித்தவர்கள், வாழ்வின் சுவையைப் பருகிக்கொண்டிருந்தவர்கள். செல்வத்தைப் பெறுவதிலே ஓர் இன்பம் கண்டனர். செல்வாக்கைப் பெருக்கிக்கொள் னதிலே வேட்டையாடும் ழிருகமாக இருந்தனர் - வாழ்வு எவ்வளவு சுவைதருகிறது. மாளிகையில் வாழும்போது, மலர்த்தோட்டங்களிலே வீசும் மணத்தை உட்கொள்ளும் போது, மலரணி கொண்டைச் செருக்கிலே அவர் மையல் தரும் கண்ணின் மினுக்கிலே. உள்ள இன்பம் கொஞ்சமா கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் ஓடிவந்து கட்டளைக்குக் காத்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் பெருமிதம் சாமான்யமா- பேழையிலே விதவிதமான அணிபணிமணி கள் மின்னும்போது கண்களிலே களிப்பு ஒளிவிடுகிறதே பெரும்பதவிகள் கிட்டிடும்போது, மார்பு நிமிர்கிறது, நடை யிலே ஒரு புது முறுக்கு ஏறுகிறது. பேச்சே புதிய பொலிவு பெறுகிறதே - இவைகள் எல்லாம் இன்பத்தேன் அல்லவா! இவ்விதமான வாழ்வைச் சுவைத்துக்கொண்டி ருந்தவர்கள் - ப்ரூனோவைத் தண்டித்தவர்கள். எனவே. அவர்கள். எதையும் ஏற்க நெஞ்சம் இடம் தரும் சாக மட்டும் துணிவு இராது. நாள் செல்லச் செல்ல, நெஞ்சு விெழும். ஆசை அரும்பும், உறுதி குலையும், ப்ரூனோ, உயிருக்கு மன்றாடுவான் என்று எண்ணினர். பெருமழை பெய்கிறது, மண்மேடு கரைகிறது. பாறை எப்போதும் போலத்தானே இருக்கிறது! ஏடு பல படித்த அந்த ஏமாளி கள். இந்தச் சிறு உண்மையை உணரவில்லை-ப்ருனோ. வாழ்வு என்பதற்குக் கொண்டிருந்த 'தத்துவம்' தூய்மை நிரம்பியது.வீர உள்ளத்தில் மட்டுமே தோன்றவல்லது. சுயநலமிகளும் சுகபோகிகளும் குது மதிபினரும், அதனை உணர்தல் இயலாது.