பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 உடன்பிறந்தார் இருவர் 'காப்பாளர்' பதவியில் இல்லை. எனினும், கெயஸ், இதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும்படி மக்களிடம் கூறினான்: பலம் திரண்டுவந்தது. ஆத்திரமுற்ற மக்கள், அக்ரமம் புரியத் துணிந்த கான்சலின் பணியாள் ஒருவன் பதட்டமாக நடந்து கொண்டதற்காக அவனைக் கொன்றுவிட்டனர்; கெயஸ் இதைக் கண்டித்தான். செல்வர். இறந்தவனைக் காட்டி ஓலமிட்டனர் ஐயகோ! அக்ரமத்தைக் காணீர்! படுகொலை புரிந்துவிட்டனர், ஊழியனை ! என்று முகத்திலறைந்து கொண்டு அழுதனர், சந்தைச் சதுக்கத்திலே இந்த விந்தைக் காட்சி / எந்தச சந்தைச் கதுக்கத்திலே டைபீரியசைத் தாக்கிச் சாகடித்த னரோ, நூற்றுக்கணக்கான ஏழை எளியவரைக் கொன்று ருவித்தனரோ, எந்த இடத்தில் மனித மிருகங்கள் உத்தமர் களைப் பிய்த்து எறிந்தனவோ, அதே இடத்தில் இந்த மாய்மாலம்M அரசுக்குப் பேராபத்து வந்து விட்டது -- இனிக் கடுமை யான நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான் என்று கிளம்பினர். செல்வர்கள், படைக்குக் குறைவு என்ன. பணம் இருக்கும்போது! செல்வர்கள் தங்கள் முழு வசதி யையும் பயன்படுத்தினர். கெயஸ் கிரேக்கஸ் பலிபீடம் செல்லவேண்டியவனாகிவிட்டான். ஏழையர் அவன் பக்கம் தான் நின்றனர். எனினும் களத்தில் வென்றார்கள், கடும் போரிட்டுப் பயிற்சி பெற்றவர்கள். இரத்தத்தை உறிஞ்சிப் பழக்கப்பட்டவர்கள். ஈரமற்ற நெஞ்சினர், சுகபோகத்தை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தால் வெறியரானவர்கள். கெயசுக்கு எதிராகக் கிளம்பினர், அரசு அவனுக்கு எதிராக! அவன் படைவரிசையிலேயோ, உழைத்து அலுத்த உத்தமர் கள்! ரோம் நகரச் சீமான்களின் முகாமில், குடி, கொண் டாட்டம், வெறிச் செயல்கள் கெயஸ் முகாமில், உறுதி, வசதிக் குறைவு,