பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 உடன்பிறந்தார் இருவம் ? மறுக்க முடியாது. ஆனால், போகாமலிருக்க முடியுமா உயிரா பெரிது? விழிப்புணர்ச்சி அளித்து விட்டோம். இன்று இல்லாவிட்டால் மற்றோர் நாள். வெற்றி ஏழைய ருக்குக் கிடைத்தே தீரும். என்னைக் கொல்வர்; எனினும், நான் உயிருடன் இருந்தபோது செய்த தொண்டுக்குச் சிகர மாக அல்லவா அந்தச் சாவு அமையும். ஏழைக்காகப் பரிந்து பேசமட்டுமல்ல, சாகவும் தயாராகச் சிலர் முன்வந்து விட்ட னர் என்பது உறுதிப்படுத்தப் பட்டால்தான். விடுதலை கிடைக்கும் மக்களுக்கு- என்று எண்ணினான். துணைஸ் யின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். தரையில் புரண்டழுகிறாள் துணைவி; தளிர் வாடுகிறது. தன்னலமற்றோன், மரணத்தை நாடிச் செல்கிறான், அமளி! வெறியாட்டம்! நிலைமை! படுகொலை ! பயங்கர செல்வர் கரமே ஓங்குகிறது: கொல்லப்படுகிறார்கள் கொடுமையை எதிர்த்தோர். நிலைமை கட்டுக்கு அடங்குவதாக இல்லை. கெயல் கிரேக்கஸ், இரத்தவெள்ளம் பெருகக் கண்டான். நியாயத்தைப் பெற, இவ்வளவு கடுமையான விலையா என்று எண்ணி வாடினான். கயவர் கரத்தால் மாள்வதைவிட, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று துணிகிறான். நண்பர் சிலர் தடுக்கி றார்கள். இந்தப் பொல்லாத புயல் வீசுமட்டும் வேறோர் புகலிடம் தேடிக்கொள்வது நல்லது; புயலின் வேகம் தணிந்ததும், திருப்பித் தாக்குவது பயன் தரும் என்று கூறினார், கெயஸ், அமளி நடைபெறும் இடத்தைட்டு அகன்றான். வழிநெடுக அவனை வாழ்த்துகிறார்கள். “நல்லோ!ே இந்த நாசச் சுழலில் சிக்காதே ! புகவிடம் செல். பதுங்கிக்