பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

தொடர்பாக, மற்றொன்றும் கூற விரும்புகிறேன்.

கழக உறுப்பினர்கள், கொள்கைப் பிடித்தம் கொண்டவர்கள் ஆனால் கழக அமைப்பிலும், சமூக அமைப்பிலும் குறிப்பிடத்தக்கவர்கள் என்ற வரிசையில் இல்லாதவர்கள், பலப்பல ஆயிரம், சிறை செல்ல, வழி செய்து, கழகம் பெருமை தேடிக்கொள்வதிலே பொருள் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை.