பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


கொதிப்பு அடைகின்றனர்; அந்தக் கொதிப்பை வேறுவகையிலே காட்ட இயலாத நிலையினரானதால், அடுத்த தேர்தல் வரட்டும் என்று காத்துக் கொண்டுள்ளனர், கொடுமையாளரைத் தண்டிக்க; கொடுமைக்கு ஆளான நம்மை ஆதரிக்க! அடுத்த தேர்தல் வருகிற போதோ, நாம் இல்லை, தேர்தலில்! ஏனெனில், பிரிவினை பேசுவோர் தேர்தலுக்கு நிற்பதும் தடுக்கப் பட்டுவிடுகிறது.