பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


யானைமேல் பானைத் தேன்.

என்னையும் பொருளாய் எண்ணி
எழுதரும் அங்க யற்கண்

அள்னை, என் கனவில் தோன்றி,
அடிகள் நும் வரவும், நீவிர்

சொன்ன நற் தமிழும் பற்றிச்
சொன்னதால் வந்தேன். யானை

தன்னில்நீர் எழுந் தருள்க
தமிழுடன்! என்றான் மன்னன்

தெய்விகப் பாடல் தன்னைத்
திருவரங் கேற்று தற்கே,

எய்துமா றனைத்தும் மன்னள்.
ஏற்பாடு செய்தான். தேவர்

துய்யநற் றமிழ்ச்சா ராயம்
துய்த்திடக் காத்திருந்தார்.

கையில்வாத் தியங்கள் ஏத்திக்
கந்தர்வர் கண்ணாய் நின்றார்.

67