பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

________________

87 டத்தை, ஜார் காலத்தில் இருந்த ரஷிய சீமான்கள் கூட்டத் திற்கு ஒப்பானது என்றுரைத்து, அந்தச் சரிதம் மீண்டும் நடைபெறும் என்று எச்சரித்தார் 1 அந்தச் சிறுகும்பலின் சக்தி அவருக்குத் தெரியக் காரணமிருக்கிறது. அந்தச் சிறு கும்பல், பெரும்பாலானவரை ஆட்டிப் படைக்கும் சூழ்ச்சிப்பற்றி அவர் அறிந்துகொள்ளாதிருக்க முடியாது; அவர் அதுபற்றி வெளியே பேசாதிருக்கிறார். ஆனால் இன்று இசை, அவருடைய உள்ளத்திலே சென்று உண்மையை இழுத்து, வெளியே எறிந்தது என்றே நாம். நம்புகிறோம். று ரஷிய மொழி,ஏழை எளியவர் மொழி : பிரெஞ்சு மொழி கனவான்கள் பேசும் மொழி : ஆகவே. நாங்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறோம் என்று உரைத்த ரஷிய சீமான் கும்பல்போல், இங்கு ஒரு சிறிய கூட்டத்துக்குத் தமிழ்மொழியிடம் துவேஷ மிருக்கிறது. இதுவரை, அவர் கள் பெரும்பாலோரை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்களே, அதையே தான் இம் மனப்பான்மையும் காட்டுகிறது என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். உண்மை ! ரஷ்ய சீமான்கள் பிரெஞ்சு மொழியைக் கனவான்கள்" மொழி என்று கூறின துபோல், இங்கு ஒரு சிறு கூட்டம், சமஸ் கிருதத்தைத் "தேவபாஷை' என்று கூறிக்கொண்டி ருக்கிறது. பெரும்பாலானவர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிகிறது. ஜார் காலத்துச் சீமான்கள் மன்னனும் மத குரு மார்களும் வாழ்க! மற்றையோர் மாளினும் மாள்க! என்று ரைத்தது போலவே, மனுவும்! மாந்தாதாவும் அருளியது. பூதேவர்களிடம் மற்றையோர் மண்டியிட்டே கிடத்தல் முறையென்று கூறுகிறது. ரஷிய சீமானாவது, ரஷிய உழவனோ, பாட்டாளியோ தொட்டால் தீட்டு எனக் கருதினானில்லை. இங்குள்ள சிறு கூட்டம் பெரும்பாலான