பக்கம்:எனது நண்பர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பகுத்தறிவுத் தத்துவத்தை இனிமையாகத் தமிழிலே சொல்லிச் சென்றார்கள் என்பதை கி. ஆ. பெ., அவர்கள் எடுத்துத் தந்திருக்கின்றார்கள். பேராசிரியர் நமச்சிவாயர் முதலியார் அவர்கள் அந்தச் சொற்பொழிவில்,

“தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை . தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன.”

எனக் கூறியிருக்கின்றார்கள்.

இந்தக் காலத்தில் நம்மைப் பார்க்க யாராவது வருகின்றார்கள் என்றால் ஏதோ காரணத்திற்காக வருகின்றார்கள் என்பது தான் பெரும்பாலும் ஏற்படுகின்ற நிகழ்ச்சி, பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள், கி.ஆ.பெ, அவர்களைத் தமிழுக்காகப் பார்த்தார்; தனக்காகப் பார்க்கவில்லை. கி. ஆ. பெ. அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை. கி.ஆ.பெ. வந்த காரணமென்ன என்று கேட்டபோது, தங்களைப் பார்க்க வந்தேனே தவிர, வேறு காரியம் எதுவுமில்லை என்று சொல்லிச் சென்றாராம். இப்படி அன்பொழுகும், தமிழார்வம் ஒழுகும் கதிரேசஞ் செட்டியார் தன் இல்லத்திற்கு வந்ததை கி.ஆ.பெ. அவர்கள்,

“என் வாழ் நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில, அவற்றில் பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி ஏன் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று”

என்று கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/10&oldid=986044" இலிருந்து மீள்விக்கப்பட்டது