பக்கம்:எனது நண்பர்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126  எனது நண்பர்கள்
 

“முயலுங்கள், இயலும்” என்றேன். நாட்டின் நலனைக் கருதி இக்குறை ஒன்று அவரை விட்டு விலக வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.

தொண்டு

அன்பர் சி. என். அண்ணாத்துரை எம், ஏ., அவர்கள் ஒரு சிறந்த அறிஞர், நல்ல எழுத்தாளி. உயர்ந்த பேச்சாளி. முனைந்த உழைப்பாளி. சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், நாடகக் கதாசிரியர், நடிகர் எனக் கூறலாம். இவ்வெல்லாத் துறையாலும், நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு ஆகியவைகளைச் செய்து வருபவர். திட்டம் போட்டு உட்கார்ந்து, உடம்பு வணங்கி வேலை பார்க்கின்ற ஒரு தொல்லையைத் தவிர, மற்ற எல்லாத் தொல்லைகளையும் ஏற்றுத் தொண்டாற்றும் இயல்பு உடையவர்.

முடிவு

அன்பர் அண்ணாத்துரை அவர்களைத் தமிழ்நாட்டின் பல செல்வங்களில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அவர் ஒரு நல்ல தமிழர். இன்றைய இளைஞரும் எதிர்காலத் தலைவரும் ஆவர். அன்பர் அண்ணாத்துரையைப் போன்ற பலர் எதிர்காலத் தமிழ்நாட்டிற்குத் தேவை; மிகவும் தேவை. இப்போதே சிலர் தோன்றி வருகிறார்கள். இன்னும் பலராகப் பெருக வேண்டும் என்பது எனது எண்ணம். பண்டைப் பெருமையையும், பழம் புகழையும் பேசிக் கொண்டே எல்லாத் துறையிலும் அன்னியருக்கு அடிமைப்பட்டுத் தன் சிறப்பையும் மறந்து வாழுகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்தகைய அறிஞர்களும், தொண்டர்களும் தேவை.

மேலே குறித்த இக் கட்டுரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘அறிஞர் அண்ணாத்துரை’ என்ற நூலுக்கு நான் எழுதியது. இந்த என் எண்ணம் வீண்-