பக்கம்:எனது நண்பர்கள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 

வழக்கறிஞர் வன்னிய சிங்கம்

1911 –ஆவது ஆண்டை எவராலும் மறக்க இயலாது. ஏனெனில், அது ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்குப்பட்டம் கட்டிய ஆண்டும். அறிஞர் திரு. கு. வன்னிய சிங்கம் அவர்கள் பிறந்த ஆண்டுமாகும், அவர்கள் பிறந்தநாள் அக்டோபர் மாதம் 18–ஆம் தேதி. திரு. வன்னியசிங்கம் அமரரான நாள் 1959–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமை. தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ்த் தொண்டும் அரசியற்றொண்டும் புரிந்த தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களும் அமரரான தினம் செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமையே யாகும். இதிலும் சிறப்பாகத் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வேறு என்ன ஒற்றுமை தான் இருக்க முடியும்!

அவரது இவ்வுலக வாழ்வு 49 ஆண்டுகளே. அதிலும் அவர் அன்பு மனைவியுடன் வாழ்ந்த குடும்ப வாழ்வு 16 ஆண்டுகளே. அதிலும் அவருடைய அரசியல் வாழ்வு 12 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் அவருடன் எனது நட்பு ஆண்டுகள் 7 மட்டுமே. அதிலும் கடைசி முறையாக என்னிடம் அவர் பேசி மகிழ்ந்ததற்கும், அவருடைய வாழ்வு மறைந்ததற்கும் இடையில் உள்ள நாட்கள் 7 மட்டுமே.

அன்பர் திரு. வன்னியசிங்கம் அவர்கள் உயர்ந்த . அறிவாளி, சிறந்த எழுத்தாளி, நல்ல பேச்சாளி, அரிய கருத்தாளி, கடின உழைப்பாளி, சிறிய முதலாளி,