பக்கம்:எனது நண்பர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  139

அவர்களும் ஆவர். இம்முப்பெருத் தலைவர்களையும் நகரத்தார் சமூகம் மட்டுமல்ல, தமிழகமே என்றும் மறவாது.

தியாகராசர்

ஆ. தெக்கூரில் பிறந்தார். பிறந்த ஆண்டு 1893. இன்று இருந்தால், அவருக்கு வயது 89 இருக்கும். எனக்கு ஐந்து வயது மூப்பு. எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு 48 ஆண்டுகள் ஆயின. எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தவர், பசுமலை டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.

நூல் ஆலைகள்

தம் 27–வது வயதில் தொழில்துறையில் இறங்க எண்ணி மதுரைக்கு வந்தார். 29–வது வயதில் மீனாட்சி ஆலையைத் தொடங்கி நடத்தினார். தொடர்ந்து பல் நூற்பு ஆலைகளை பல ஊர்களில் நிறுவி உழைப்பால் உயர்ந்து வெற்றிகண்ட பெருமகன். தமிழகத்தில் 12 ஆலைகளைத் தோற்றுவித்து நடத்திப் பெருமை பெற்றவர் அவர் ஒருவரே.

பெருஞ்சிறப்பு

பல ஆலைகளைத் தொடங்கி நடத்தியதால் மட்டுமல்ல, பிற ஆலை அதிபர்களாலும், தமிழகத்தின் மிகப் பெரும் பஞ்சு வணிகர்களாலும், ஏழைத் தொழிலாளர்களாலும், அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைவர்களாலும், பொது மக்களாலும் போற்றும்படி வாழ்ந்ததே அவர் அடைந்த பெருஞ் சிறப்பாகும்.

நூல் நிலையம்

அவர் பஞ்சாலைகளைத் தோற்றுவித்தார். பருத்தி நூல்களை மட்டும் ஆராயவில்லை. பழந்தமிழ் நூல்களையும் ஆராய்ந்தார். அவர் படித்தறிந்த நூல்கள்