பக்கம்:எனது நண்பர்கள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  143
 
தேர்தல்

ஒரு சாயம் அவர், அவரது மகன்கள் சுந்தரம், மாணிக்கவாசகம் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் பல ஊர்களில் பல தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்றார்கள். கருமுத்து அவர்களின் தொகுதியில் அவரோடு நான் மட்டுமே பேசவேண்டும் என்பது அவருடைய திட்டமும் கொள்கையும் ஆகும். அதன்படி நான் அவருடன் சென்று, தேர்தல் கூட்டங்களில் மதுரை, திருமங்கலம், சோழவந்தான், சிவகங்கை, காரைக்குடி, மேலுார் முதலிய பல ஊர்களில் பேசினேன். அவரது அருந்தொண்டுகளையும், பெருஞ்செயல்களையும் எடுத்து விளக்கினேன். பேசிப் பலன் என்ன? பயன் ஒன்றுமில்லை. மூவரில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இது தேர்தலில் நல்லவர்கள் நிற்கும் சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்பதையே காட்டிற்று.

சமயப்பற்று

சைவசமயத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். திருக்கோவில் வழிபாட்டில் சிறந்தவர். சைவ உணவையே உண்பவர். அவரது முகத்தைத் திருநீறு எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும்.

விருந்து

கருமுத்து மாளிகையில் விருந்துகள் பலருக்கு நடை பெற்ற வண்ணமிருக்கும். அவ்விருந்தில் சுவையுள்ள பொருள்கள் பலவிருக்கும். அவற்றின் சுவையைவிட அவரது மனைவியார் இராதா அம்மையாரது இன்சொற்கனின் சுவை மிகையாக இருக்கும். அவர்கள் இருவரும் கடைசியாக அளித்த விருந்து எனக்கும் என் மனைவிக்குமே. அது அவரது சாவின் முதல் நாள் குற்றாலத்தில் இருத்த பொழுது.

மறைவு

மறுநாட் காலை 6 மணிக்குத் தன் மகன் கண்ணனை மதுரைக்கு அனுப்பிவிட்டு, மனைவியையும் அருவிக்கு