பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


கருத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, உனக்கு இயற்கையாக எப்படி வருகிறதோ அப்படிச்செய். ஒவ்வொருவரும் அவர்களின் உடல் அமைப்பிற்கும், அங்க அசைவுகளுக்கும் ஏற்றவாறு தான் நடிக்க வேண்டும். ஒரு வரைப் பார்த்துக் காப்பியடிப்பது அவரவர்க்கு உண்டான இயற்கை நடிப்பைக் கெடுத்துவிடும்” என்றார்.

ராஜாவின் இந்த அறிவுரை நான் நடிப்புத் துறையில் வளர்ச்சிப் பெறப் பெருந் தூண்டுகோலாக இருந்தது.

அந்தநாளில் பம்பாய் ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் நாங்கள் தங்கிய தெருவிலேயேதான் இருந்தன. பேசாப் படத்திலேயும், பேசும் படத்திலேயும் நாங்கள் கண்ட பல நடிகர்கள் எங்கள் கண்களிலே தென்பட்டார்கள். பில்லிமோரியாவையும், ஜால்மெர்ச்சென்டையும், பேசாப் படக் கத்திச்சண்டை வீரர்களான விட்டல் பச்சு முதலியோரையும் நேரில் கண்டபோது எங்களுக்கு ஒரே குதுரகலமாய் இருந்தது.

தலையும் மீசையும் தப்பியது

முதன்முதலாக நான் வேடம் புனைய வேண்டிய நாள் வந்தது. ராஜா காலையிலேயே நாவிதரை அழைத்து என் தலையை கிராப், செய்ய வேண்டிய மாதிரியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு ‘மேக்கப்’ அறையில் நான் வேடம் புனைந்து கொண்டிருந்த போது அவர் வந்து பார்த்தார். கிராப் செய்திருந்த முறை அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. கோபத்துடன் நாவிதரை வரச்சொன்னார். அந்தச் சமயத்தில் நாவிதர் வருவது சாத்திய மில்லையெனத் தெரிந்தது. “கொண்டாடா கத்தரிக்கோலை” என்றதும் எனக்குக் குலை நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கத்தரிக் கோல் வந்தது. எனக்குக் ‘கிராப்’ வெட்டத் தொடங்கி விட்டார் ராஜா. எங்கள் நடிகர்கள் சிரிப்பை அடங்கிக் கொண்டு மெளனமாய் நின்றார்கள். ஒருவாறு தலையலங்காரம் முடித்தது. என் முகத்தைப் பார்க்க எனக்கே கோரமாக இருந்தது. மீசை அடிக்கடி ஒட்ட வேண்டிய கஷ்டத்தை உத்தேசித்து, பம்பாய் சென்றதும் நான் மீசை வளர்த்துக் கொண்டேன். சிகையலங்காரத்தை