பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328


ளுக்குப் பின் நீண்ட காலமாகப் பெண்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவோடு இருந்தோம். ஆனால் 1936இல் பாலாமணி படம் முடிந்து மீண்டும் குழுவைத் தொடர்ந்து நடத்தியபோது சுசீந்திரம் கோமதி எங்கள் குழுவிலே சேர்க்கப் பெற்றார், இவர் நன்றாகப் பாடும் திறமை பெற்றவர். இவருடைய இசைஞானத்துக்காகவே இவரை விரும்பிச்சேர்த்துக் கொண்டோம். வயது வந்த பெண்ணாக இருந்ததால் வந்த உடனேயே முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஏறத்தாழ அப்போது நடைபெற்ற எல்லா நாடகங்களிலும் கதாநாயகி வேடம் இவருக்கே கொடுக்கப்பட்டது. எட்டையபுரம், கோவில் பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஏறக்குறைய ஏழுமாத காலம் இவர் கம்பெனியில் நடித்தார். நாகர்கோவிலில் இவர் தாமாகவே விலகிக் கொண்டார். நல்லமுறையில் நடித்து வந்த இவர் திடீரென்று விலகியது எங்களுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நாகர்கோவிலிலிருந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ரங்கராஜு நாடகங்கள் நிறுத்தப்பட்டன

அப்போது பெரும்பாலும் ரங்கராஜுவின் நாடகங்களே எங்கள் குழுவில் அதிகமாக நடைபெற்று வந்தன. இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தைந்து ரூபாயும், இராஜேந்திரன், சந்திர காந்தா, மோகனசுந்தரம் ஆகிய நாடகங்களுக்கு நாடகம் ஒன்றுக்கு முப்பது ரூபாயும் ராயல்டியாகக் கொடுத்து வந்தோம். வசூல் மிக மோசமாக இருந்த நிலையில் இந்தத் தொகையைக்கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

நாவல் நாடகங்களுக்குச் சில சமயங்களில் ஐம்பது, அறுபது ஆான் வசூலாயிற்று. எனவே பெரியண்ணா ரங்கராஜாவுக்குக் கடிதம் எழுதினார். சுமார் பத்தாண்டுகளாகத் தங்கள் நாட கங்களை நாங்கள் நடித்து தருகிறோம்.இதுவரை பல ஆயிரங்களை ராயல்டியாகக் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் உத் தேசித்து. இப்போது வசூல் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், ராயல்டி தொகையைக் கொஞ்சம் குறைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்குக் கொடுப்