பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464


நாடகமாக்கித் தருமாறு கேட்டோம். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்தார். நாடகத்தைப் படித்தோம். எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றை எழுதிச் சேர்த்தார் சின்னண்ணா. மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதினார். ஏற்கனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பில்ஹணியத்தைப் படித்து அதன் சுவையை அனுபவித்தவன் நான். நாடகத்தின் பிற்பகுதி அதனைத் தழுவியிருக்க வேண்டுமெனக் கூறினேன். ஏ. எஸ். ஏ. சாமி ஏற்றுக்கொண்டார். அதன்படியே எழுதித் தந்தார். அவருடைய உரையாடல்கள் சின்னஞ்சிறு வாக்கியங்களாக புதிய நடையில் அமைந்திருந்தன. ஏ. எஸ். ஏ. சாமி திரைப்படத் துறையில் சிறந்த வசனகர்த்தாவாகப் புகழ் பெறுவார் என்று அப்போதே கூறினேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பில்ஹணன் நடைபெறவிருப்பது பற்றி எழுதினேன். “தங்கள் பில்ஹணியத்திலுள்ள புரட்சிக்கவியின் அடிப் படையில்தான் நாடகத்தின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தேன், அதற்கு பாவேந்தரிடமிருந்து பதிலில்லே. ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மூன்றாவது முறையாக ஒரு கடிதம் எழுதினேன்.

“தங்கள் புரட்சிக் கவியிலுள்ள சில கருத்துக்களை ‘பில்ஹணன்’ நாடகத்தில் கையாளப்போகிறோம். அதற்குத் தங்களின் அன்பான அனுமதி தேவை. இந்த மூன்றாவது கடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் தாங்கள் அனுமதி யளித்ததாகவே கருதப்படும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. சரி இனி நேரில் கண்டு சொல்லிக்கொள்ளலாம் என்ற துணிவோடு நாடகத்தை நடத்தினோம். 1944 மார்ச்சு 13ஆம் தேதி பில்ஹனன் அரங்கேறியது.

நிலவுக் காட்சி

பில்ஹணனுக்கென்று சில காட்சிகளைத் தயாரித்தோம். பில்ஹணனின் ஆசிரமம், யாமினியின் பூஜை அறை, சூரிய