பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் நாடகப் பரிசுத் திட்டம்

நவம்பர் 4 ஆம் நாள் திருச்சி சேர்ந்தோம். நாடகம் நடை பெறும் நகர சபைத் தியேட்டரில் தங்கினோம். கம்பெனிக்கு வீடு தேடியலைந்தோம். எங்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மட்டும் தென்னுரில் ஒரு வீடு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டரிலேயே குடியிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. சமையல்மட்டும் பக்கத்திலுள்ள ஒருசிறிய வீட்டில் செய்து கொட்டகையில் கொண்டு வந்து பரிமாறினார்கள். இதனால் நாடகத்தைத் தொடங்கவும் தாமதம் ஏற்பட்டது. கரூர் வெண்ணெய் மலை செட்டியாருக்குத் தென்னுாரில் பெரிய வீடு இருந்தது. அவர் தேவகோட்டையில் இருந்தார். அவரைப் பார்த்துவர தம்பி பகவதி தேவக்கோட்டை போய்த் திரும்பினார். செட்டியார் ஊரில் இல்லை.வேறு வழியின்றிக் கொட்டகையிலேயே தங்கியிருந்தோம்.

17.11.44இல் திருச்சியில் சிவலீலா தொடங்கியது. 1939 இல் திருச்சியில்தான் சிவலீலாவை அரங்கேற்றினோம். அப்போது வருவாயில்லை. இப்போது அதேதிருச்சியில், அதே நாடக அரங்கில் நான்காண்டுகளுக்குப் பின் சிவலீலாவை அமோகமாக வரவேற்றார்கள். ஞாயிறு புதன்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும்,மற்ற நாட்களில் இரவு 9-30 மணிக்குமாக நாடகம் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்றது. வைரவிழா கொண்டாடினோம். தஞ்சை நகரசபைத் தலைவர் திரு ஏ. ஒய். அருளானந்தசாமி காடார் சிவ லீலா வைர விழாவுக்குத் தலைமை வகித்துப் பாராட்டினார்.

தமிழ் நாடகப் பரிசு

சிறுகதைப் போட்டிப்பரிசு; தொடர்கதைப் போட்டிப்பரிசு; கட்டுரைப்பரிசு என்றெல்லாம் பத்திரிகைகள் நடத்துகின்றனவே