பக்கம்:எனது பூங்கா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா ? கூறும். அதே மாதிரிதான் நம்மிலும்ஆண்கள் பெண்களையே அழகாகக் கூறுகின்ருேம். இப்படித் தம் இனத்தில் பெண்ணேயும் பிற இனத்தில் ஆணையும் அழகாகக் கூறுவதன் காரணம் யாது காதல் உணர்ச்சி பெண்ணே அழகாகக் கருதுகின்றது. இதுதான் உண்மையான விஷயம். - அப்படியானுல் பெண்களும் பெண்களேயே அழகாகக் கூறுவானேன்? அதற்குக் காரணம் ஆண்கள் அவ்விதமான எண்ணத்தை ஆயிரக் கணக்கான வருஷங்களாகக் கூறிக் கூறி அவர்களிடம் உறையும்படி செய்துவிட்டதுதான். சுத் தமான அறிவுடன் ஆராய்ந்தால் ஆனும் சரி, பெண்ணும் சரி, ஆணேத்தான் அழகாக எண்ணுவார்கள். மக்களில் ஆணும் பெண்ணும் பெண்னேயே அழகு டையவளாகக் கூறிய போதிலும் தினசரி வாழ்க்கையில் நாம் நம்மையறியாமலே ஆணேத்தான் அழகாகக் கருதி' நடந்து வருகின்ருேம். ஆணுக்கு அழகு செய்கின்ருேமா. பெண்ணுக்கு அழகு செய்கின்ருேமா ? ஆண் அழகு நிறைந்திருப்பதால் ஆணே விடப் பெண் னேயே அழகாக ஆடை ஆபரணங்களைக் கொண்டு அலங் காரம் செய்கிருர்கள். ஆணுக்கு அலங்காரம் செய்யவேண்டியதில்லை. யாரே அழகுக்கழகு செய்வார். இயற்கை தந்த அழகுச் சின்னங் களே யெல்லாம் நாம் நீக்கி விட்ட இந்தக் காலத்திலும் கூட ஆண்கள் அலங்காரம் செய்யாவிட்டாலும் அழகாகவே தோன்றுகிருர்கள். —140–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/142&oldid=759337" இலிருந்து மீள்விக்கப்பட்டது