பக்கம்:எனது பூங்கா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்திற்குச் சுருக்க வழி ருடைய நலத்திற்கே என்பதையும் கூறுங்கள்' என்று «Tr விர்ை. உத்தியோகம் வேண்டாம் என்று மார்வெல் மறுத்து விடுவார் என்று ஒருநாளும் எதிர்பாராத பிரபுவுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் மந்திரி அல்லவா ? திடீரென்று ஆயிரம் பவுன்கள்கொண்ட ஒரு பணப்பையை எடுத்து மேஜை மேல் வைத்து, அரசர் இதைத் தங்கட்கு அனுப்புகிருர் வேறு ஏதேனும் தேவையானல் வேண்டும் பொழுது தகவல் கொடுக்கவும் வேண்டுகிருர் என்ருர். மார்வெல் குலுங்கக் குலுங்க நகைத்தார். இதென்ன இப்படி என்னைக் கேலி செய்ய எண்ணுகிறீர்களா ? எனக்கு என்ன தேவை? இருக்க இந்தக் குடில் உளது. உண விற்கோ இதோ நிற்கும் இந்த வீட்டுக்காரியைக் கேளுங்கள்' என்று சொல்லிக் கொண்டே அந்த அம்மாளே நோக்கி, அம்மா எனக்கு உணவாக நேற்று என்ன தங் தீர்கள்?' என்று வினவினர். நேற்று ஒரு துண்டு இறைச்சிஇன்று என்ன ? இன்று அதில் மீதியுள்ளது.' சரி, நாளேக்கு அதிலுள்ள எலும்பை ஸ அப் செய்து குடிப்பேன், போதாதா? என்று மந்திரியிடம் கேட்டார். மந்திரி என்ன கூறுவார் ! ஒன்றும் சொல்ல காவெழவில்லை. சுதந்திர ஜோதியைக் கண்டு திகைத்துப் பிரமித்து கின்று விட்டார். பின்னர் சிறிது நேரம் சென்றதும், ஒன்றும் மொழியாது வெளியே போய்விட்டார். –o Oo–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/80&oldid=759413" இலிருந்து மீள்விக்கப்பட்டது