பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

என்ன? ஏன்? எப்படி?

ஏற்பட்டும் பஞ்சம் ஏற்படுவதுண்டு, ஒழுங்கில்லாத ஆட்சியாலும் பஞ்சம் உண்டாவதுண்டு. இந்தியா முழுவதும் இன்று பரவிவரும் பஞ்சத்துக்கு ஆட்சி ஒழுங்கில்லாமையே காரணமாகும்.
மகாத்மா காந்தி இப்போது இருந்தால் என்ன செய்வார்?
நாடு திருந்த வேண்டும், இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதமிருப்பேன் என்று சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டுவிடுவார்.
சிலைகள் வைப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை?
அரிசி ஆறு ரூபாய் விற்கும் போது இது என்ன வெட்டிச்செலவு என்று தான் தோன்றுகிறது. இன்று அரிசி ஆறு ரூபாய் விற்பதற்குக் காரணம் நம் ஆட்சியாளர்கள் சரியான பொருளாதாரத் திட்டம் தீட்டாததேயாகும். அதற்குக் காரணம் சரியான அனுபவம் இல்லாததாகும். அதற்குக் காரணம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாம் அடிமைகளாக இருந்ததாகும். அதற்குக் காரணம் நம்மிடம் நாட்டுப் பற்றுக் குறைந்ததாகும். நாட்டுப் பற்றை யூட்டுவதற்கு இந்தச் சிலைகள் பயன்படும். நாட்டுப் பற்று வளர்ந்தால் அரசியல் விழிப்பு ஏற்படும். சரியான பொருளாதாரத் திட்டம் தோன்றும். அப்போது அரிசி விலை குறைந்து போகும். வருங்காலத்திலாவது நாம் செம்மையாக வாழ இந்தச் சிலைகளும், அடிப்படைக் கல்வி அளிப்பனவாகும்.
பிச்சைக்காரர் தொல்லை எப்போது ஒழியும்?
பிச்சைக்காரர் உங்களுக்கு ஒரு தொல்லையாகத் தோன்றுகின்றனர். வாழ்வே பெருந்தொல்லையாகக் கொண்டு வாழும் அவர்களுடைய நெஞ்சத்துயர் எப்படி