பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ♦ என் அமெரிக்கப் பயணம்

கங்குலை பகலை சென்று நாடிக்
       கணமங்கையுள் கண்டுகொண் டேனே

- பெரி. திரு. 7.10:3

என்ற பாசுரத்தைச் சேவிக்கின்றோம்.

அடுத்து, இலட்சுமி நாராயணன் சந்நிதிக்கு வருகின்றோம். திருமங்கை மன்னனின் திருஇடஎந்தை திருத்தலத்தின் பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன. அவற்றுள்,

உளங்கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்;
       உனக்கன்றி எனக்கன்பு ஒன்று இலாளல்
‘வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ் சோலை
       மாயனே!’ என்றுவாய் வெருவும்;
களங்கனி முறுவல் காரிகை, பெரிது
       கவலையோ டவலஞ்சேர்ந் திருந்த
இளங்கனி இவளுக்கு என்நினைந் திருந்தாய்?
       இடவெந்தை எந்தை பிரானே!

பெரி-திரு. 2.7:7

என்ற பாகாத்தை ஓதி உளங்கரைகின்றோம். இப்பதிகம் ‘தாய்ப் பாசுரமாக’[1] நடைபெறுகின்றது.

அடுத்து அநுமன் சந்நிதிக்கு வருகின்றோம். இந்தச் சிறிய திருவடி ஆற்றிய செயல்கள் அனைத்தும் சிறந்தவை. அவனைப்பற்றி கம்பன் அருளிய

அஞ்சிலே ஒன்று பெற்றான்
       அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றுஆ றாக
       ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
       அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தூன்
       அவன்எமை அளித்துக் காப்பான்

           - கம்பரா, பாலகா. காப்பு அநுமன்துதி

என்ற பாடலை மிடற்றொலியால் நவிற்றி வழிபடுகின்றோம்.


பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content

  1. தாய்ப்பாசரம் - தன் மகள் நிலைபாத் தாய் எடுத்துக் கூறுவதாக அமைந்து