பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 0 என் அமெரிக்கப் பயணம்

ஒழுகும் ஒரு வைணவர் வீட்டில் தந்து உணவாகச் செய்வித்து உண்பது வழக்கம். இவர் திருவரங்கத்திலிருந்தபோது தமக்கு நன்றாகத் தெரிந்து பழகின காஞ்சியைச் சேர்ந்தவர்களையே கோயில் ஊழியர்களாக நியமிப்பது வழக்கம். இதில் எந்த வித தீய எண்ணமும் இல்லை. இதனால் திருவரங்கத்தைச் சார்ந்த சிலர் இராமாநுசர்மீது காழ்ப்பும், வெறுப்பும் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் இவருக்கு அமுது படைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வைணவர். இவர் இராமாநுசரைத் தீர்த்துக்கட்ட நினைக்கின்றார். ஒரு நாள் நஞ்சு கலந்த அமுதைத் தயாரிக்குமாறு தன் மனைவியிடம் சொல்கிறார். கணவன் சொல்லை மீறினால் தனக்கு நரகம் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடைய உத்தமி அவள்; ஆசாரியப் பெருமகனுக்கு இதனைப் படைத்தால் அதனை விடக்கொடிய நரகம் உண்டு என்று நம்புபவள்.

இப்பெருமாட்டி உடையவரை அமுதுக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஒருவித மரியாதையையும், அமுது உண்டபின் அனுப்பும்போது ஒருவித மரியாதையையும் செய்வது வழக்கம். ஆனால் விடங்கலந்த அமுதை உண்ண வந்த நாளன்று உண்டபின் செய்து அனுப்பும் மரியாதையை முதலில் செய்து விட்டார்.இராமாநுசரும் உண்ணாமல் திரும்பி விட்டார். இன்னும் இவருடைய கைங்கரியத்தை ஏற்க வேண்டும் என்று எண்ணிய அரங்கநாதப் பெருமானே இவரைக் காப்பாற்றிவிட்டான் என்று நினைக்கத் தோன்றுகின்றது. 18 நாட்களாகத் தமது சீடன் உணவு கொள்ளவில்லை என்று கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பி தம் சீடர்களுடன் திருவரங்கத்துக்கு வருகின்றார். தமது ஆசாரியப் பெருமகனார் திருவரங்கத்திற்கு எழுந்தருள்கின்றார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற இராமாநுசரும் தம் சீடர் குழாத்துடன் அவரை வரவேற்கத் தயாராகின்றார்.

இரண்டு “கோஷ்டிகளும்’ மே மாதம் கோடை வெப்பம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் காவிரி சுடு மணலில் சந்திக்கின்றனர். இராமாநுசர் ‘அடியேன் தாசன் என்று ஆசாரியர் முன் நிலத்தில் (சுடு மணலில்) வீழ்ந்து வணங்குகின்றார். ஆசாரியர் விழித்த கண் இமைகள் மூடாமல் ஒன்றும் பேசாமல் பார்த்தவண்ணம் உள்ளார். 18 நாட்கள் உணவின்றி வதங்கியிருக்கும் உடையவரின் உடல் சுடுமணலில் துடிக்கும் நிலையைக் காணும் சீடர் குழாம் கண்களில் நீர்த்துளிகள் சொட்டுகின்றன. மனதிற்குள் கோட்டியூர் நம்பியைக் கடிகின்றனர். இராமாநுசரின் சீடர்களில் ஒருவரான ‘கிடாம்பி ஆச்சான்’ என்பவர் சுடு மணலில் வீழ்ந்து உடையவர் பெருமானை தம் உடலின்மீது தூக்கிக் கிடத்திக்கொள்ளுகின்றார். உடனே நம்பி “எழுந்திருங்கள் இருவரும்” என்று பணிக்கின்றார். தொடர்ந்து “கிடாம்பி,