பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்கத் தலைநகரில் உள்ளவை 171

(7) இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்': வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்றுவரை எல்லாவகையிலும் முறையிலமைந்த காட்சிப் பொருட்கள் பழங்கால மனித வரலாறு முதல் கடல்வாழ் பிராணிகள் துறை வரையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு விளங்குகின்றது. டினாசுர் மண்டபம் மிகப்பெரிய எலும்புக் கூட்டையும்” மற்றொரு எலும்புக்கூட்டையும்” கொண்டுள்ளது. பக்குவப்படுத்தப்பெற்ற பொருள் ஆய்வகம் பல்வேறு பக்குவப்படுத்தப்பெற்ற பொருள்களை ஒளிப்படங்கள் போன்றவற்றை விளக்கிக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது. ஆர்க்கின் பூச்சிக் காட்சிச்சாலை” உயிருள்ள பூச்சிகள் உணவு உண்ணும் முறைகளை விளக்குவதாக உள்ளது. இந்த அகம் இன்னும் பல்வேறுவகை விளக்கங்களைத் தரும் பகுதிகளும் அடங்கியுள்ளதாக உள்ளது.

(8) அமெரிக்கன் வரலாற்று அருங்காட்சியகம்: இங்குள்ள காட்சிப் பொருள்கள் தேசத்தின் வழிவழிச் சொத்தில்” அறிவியல், செயல் நுணுக்கத் துறை’ பண்பாடு ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டு: இந்த சுவர்களுக்குள்ளே’ என்பது ஒரு காட்சிப்பொருள். இது சாதாரண ஒர் அமெரிக்கன் எவ்வாறு வரலாறு படைத்தான், 18-ஆம் நூற்றாண்டின் ஒரு வீட்டைப் பற்றிய வரலாறு என்பவற்றைவிளக்குவன. அமெரிக்கத்தலைவர்கள் என்பது மற்றொரு காட்சிப்பொருள். இது வரலாற்றுப் புகழ்படைத்த கேட்கும் பார்க்கும் கருவி. இதன் மூலம் அமெரிக்கத் தலைவர்கள் பயன்படுத்திய பொருள்களைக் காட்டும் (வாஷிங்க்டனின் ஆடை, லிங்கனின் தொப்பி) இப்படிப் பல காட்சிப் பொருள்கள் அமைந்த காட்சி இது.

(9) அமெரிக்க நாட்டு அழிக்கப்பெற்ற பொருள்களின் நினைவு அருங்காட்சியகம்': அழிக்கப்பெற்ற பொருள்களைக் காட்டும் ஒரே ஒரு நினைவுச் சின்னம் இது. அழிக்கப் பெறும் தன்மைகளை விளக்குவது. நினைவு கூர்மண்டபம்’ நினைந்து பார்ப்பதற்காக அமைந்த ஒர் இடம். நிரந்தரக் காட்சிப் பொருள் ஒன்று ஹிட்லரின் நாஜி அரசு மக்களை அழித்த கொடுமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

(10) தாமஸ் யெஃபர்சன் நினைவுச்சின்னம்": இது யெயர்சனின் 200-வது பிறந்த நாள் ஆண்டுவிழாவின்போது ஏப்பிரல் 13, 1943இல்

7. Museum of Natural History 8, Dinosaur 9. Tynaurosaurs rexcast skeleton

10. Pricerlatopscast Skeleton 1 . . Orkin IFSECt ZOG 12. Heritage 13. Technology

14. U.S Holocaust Memorial Museum 15. The Hall of Remembrance 16. Thomas Jefferson Memorial