1 00 என் ஆசிரியப்பிரான்
பழைய நூல்களில் மகாபலிபுரம்_பற்றியுள்ள செய்திகளை எல்லாம் விரிவாக எழுதித் தரவேண்டுமென்று கேட்டனர். மாமல்லபுரம் என்பதே மகாபலிபுரம் என்று வழங்குவதாகவும் அங்கே ஜலசயனப் பெருமாள், தலசயனப் பெருமாள் என்று இரண்டு திருக்கோயில்கள் உள்ளனவென்றும் எழுதியதோடு வேறு பல செய்திகளையும் எழுதி உதவினர். அவற்றைக் கேட்டுக் கவர்னர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். இப்படிக் கவர்னருக்கும், ஆசிரியப் பெருமானுக்கும். அடிக்கடி தொடர்பு உண்டாயிற்று.
முதல்வர் ஆசிரியர் இல்லத்துக்கு வருகை
・・ 1912-ஆம் வருஷம் தொடங்கியது. ஜனவரி மாதம் முதல் தேதி கல்லூரி முதல்வரை யாவரும் போய்ப் பார்த்து வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த துரையைப் பார்த்து வரலாம் என்று ஆசிரியர் எண்ணினர். தம்முடைய குமாரரை அழைத்துக் கொண்டு அவர் இருந்த பங்களாவுக்குச் சென்ருர். தாம் வந்திருப்பதை ஒரு சீட்டில் எழுதி உள்ளே அனுப்பினர்.
அப்போது உள்ளே வேறு யாரோ துரையிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆசிரியர் வெளியே காத்திருக்க வேண்டி நேர்ந்தது. உள்ளே பேசிக் கொண்டிருந்தவர் வெளியில் வந்தவுடன் ஆசிரியப் பெருமான்க் கண்டார். சிறிதே நடுங்கி ஆசிரியரை வணங்கினர். அவர் ஆசிரியரிடம் படித்தவர். 'நான் நெடுநேரம் உள்ளே பேசிக்கொண்டிருந்து விட்டேன். தாங்கள் வந்திருக் கிறீர்கள் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டிருக்க மாட்டேன்; மன்னிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். -
பிறகு உள்ளே சென்றவுடன் துரையிடம் பல செய்திகளைப் பற்றிப் பேசினர். தியாகராச விலாசம் வந்து தமது புத்தக சாலையைப் பார்க்க:வேண்டுமென்று துரையிடம் ஆசிரியர் கேட்டுக் கொண்டார் அவர் மிகவும் உவகை அடைந்தார். * பிறகு வருகிறேன்' என்று சொன்னர். என்ருலும் அன்று மாலையே 3 மணிக்குத் தம் காரில் வந்துவிட்டார். தியாகராச விலாசத்தில் 1 மணி நேரம் இருந்து எல்லாவற்றையும் பார்த்து இன்புற்ருர் ஏட்டுச் சுவடிகளையே முன்பு பார்த்திராத அவருக்கு அவற்றைக் கண்டபோது பெருவியப்பாக இருந்தது. அதிலுள்ள எழுத்துக்கள், எழுதும் முறை பற்றியெல்லாம் விரிவாகக் கேட்டார். "புலவர் தமது நூலே ஒர் ஏட்டுச் சுவடியில் எழுதியிருப்பார். மூலச் சுவடியிலிருந்து எத்தனையோ பேர் பிரதிகள் பண்ணியிருக்கிரு.ர்கள். இது காரணமாகப் பல பிழைகளும் சுவடிகளில் வந்துவிட்டன.