பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 என் ஆசிரியப்பிரான்

பவ நூல்கள் கிடைக்கவில்லை. ஐம்பெருங் காப்பியங்களில் வளையாபதியும் குண்டல கேசியும் அகப்படவில்லை' என்ருர், உடனே அந்தப் பட்டக்காரர், வளையாபதியா? அது இருக்கிறதே!” என்று சொன்னபோது ஆசிரியருக்கு உவகை உண்டாயிற்று. "அதை நான் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டார். தோராளமாகப் பார்க்கலாம்' என்று சொல்லித் தம் இளவலைக் காருடன் ஆசிரியப் பிரான முதலியார் பாளையத்துக்கு அழைத்துச் செல்லஏற்பாடு செய்தார். அந்த ஊருக்குப் போைேம். அப்போது நாச்சிமுத்துப் புலவர் காலமாகிவிட்டார். அவருடைய குமாரர் இருந்தார். ஆசிரியர் அவரது வீட்டிற்குச் சென்று, 'உங்கள் தந்தையார் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா? அவற்றில் வளையாபதி உண்டா?' என்று கேட்டார்.

அவர் உள்ளே இருந்து இரண்டு கட்டு ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து போட்டார். அவற்றில் சில மஞ்சள் நூலால் கட்டப் பெற்று இருந்தன. சிலவற்றைக் கறுப்பு நூலால் கட்டி யிருந்தார்கள். ஏன் இப்படி இரண்டு விதமான நூல்களால் கட்டி யிருக்கிரு.ர்கள்?' என்று கேட்டதற்கு, மஞ்சள் நூலால் கட்டப் பெற்றவை எல்லாம் இசைக் கவிகள். கறுப்பு நூலால் கட்டப் பெற்றவை வசைக் கவிகள்’ என்று சொன்னர். அதற்கு மேல் அவருக்கு ஒன்றும் சொல்லும் ஆற்றல் இல்லை. வளையாபதி அங்கு இருக்கிறதா என்று கேட்டபோது ஒரு சின்னச் சுவடியை எடுத்துக் கொடுத்தார் அவர் அது பழைய காப்பியமாகிய வளையாபதி அன்று. வைசிய புராணத்திலுள்ள வளையாபதிச் சருக்கம்’ என்பதுதான் அது, கொங்குவேளாளர்களைச் சிலர் தாழ்வாகக் கூறி ஞர்களாம். அவர்கள் பெருமையை எடுத்துக் காட்ட அந்த ஏட்டுச் சுவடியைப் புலவர் எழுதி வைத்தார் என்று சொன்னர். கடைசியில் வளையாபதி கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பிவர வேண்டி யிருந்தது. அந்த முயற்சி மாயமான் வேட்டையாக முடிந்தது.

அப்புறம் எப்படியோ?"

ஒரு முறை. 1916-ஆம் ஆண்டு மே மாதம் 6, 7-ஆம் தேதிகளில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் சிற்றுாரில் நற்றமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு ஆசிரியப் பெருமானைத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். ஆசிரியர் அந்த அழைப்பை ஏற்று அங்கே போனவுடன் எல்லோரும் மிகவும் அன்புடன் வரவேற்றர்கள். அங்குள்ள கள்ளர் வகுப்பினர் நல்ல தமிழ் அறிவு உடையவர்கள். வரிசையாக நின்று ஆசிரியப்பெருமான