பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பலருக்கு உதவியது பிள்ளையவர்கள் குடும்ப உபகார நிதி

ஆசிரியப்பெருமானுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலமான பிறகு அவருடைய குமாரர் சிதம்பரம்பிள்ளை கப்பூர் என்னும் கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்து வந்தார். தமக்குக் கிடைத்த சம்பளம் போதாமல் அவர் அவதியுற்ருர், பிள்ளையவர்களின் மனைவியார் காவேரியம்மையார் இருந்த போது ஆசிரியர் அவ்வப்போது செலவுக்குப் பணம், உடை முதலிய பொருள்களை உதவி செய்து வந்தார், அப்படியே சிதம்பரம் பிள்ளைக்கும் அவ்வப்போது செய்வது உண்டு.

ஆனல் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரமான பயன் அளிக்கத் தக்கதாக ஏதேனும் ஒரு தொகை வழங்க வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதை எண்ணிச் செட்டிநாட்டிலுள்ள சபைகளில் ஆசிரியர் தலைமை தாங்கிப் பேசும்போது அதைப்பற்றிச் சொல்லி வந்தார். பிள்ளையவர்களின் புலமையையும் பிற பெருமை கனையும் விரிவாக எடுத்துச் சொல்லி, அந்தப் பெருமானின் குடும்பம் வறுமையில்ை துன்புறுவது தமிழ்நாட்டின் பெருமைக்கு ஏற்றது அன்று என்று எடுத்துச் சொன்னர்.

பிள்ளையவர்கள் குடும்ப உபகார நிதி என்பதாக வசூலை ஆரம்பித்து வைத்து, தாமே நூறு ரூபாய் அனுப்பி வைத் தார். மதுரை மு. ரா. கந்தசாமிக் கவிராயரும், மகிபாலன்பட்டி கதிரேசச் செட்டியாரும் (பண்டிதமணி) அந்தக் குழுவிற்குச் செயலாளர்களாக இருந்து நிதி திரட்டுவதில் ஊக்கம் காட்டினர்கள்.

பிள்ளையவர்களது குடும்ப உபகார நிதிக்கு ஆயிரத்திற்கும் மேற் பட்ட ரூபாய் சேர்ந்தது. மாயூரத்தில் ஒரு விழாவை அமைத்துப் பலரும் அறிய அந்தக் குடும்பத்திற்கு அந்த நிதியைச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. ஆனல் எந்தக் காரணத்தினலோ அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. கடைசியில் திருவாவடுதுறை மடத்திலேயே அம்பலவாண தேசிகர் முன்னிலையில் அந்தத் தொகையைப் பிள்ளையவர்களுடைய குமாரராகிய சிதம்பரம் பிள்ளையிடம் சேர்த்தனர். எதிர்பாராத வகையில் தமக்குக் கிடைத்த நன்மையை எண்ணி அவர் உள்ளம் பூரித்தார். ஆசிரியப்பிரான் காலில் விழுந்து வணங்கினர்.